திருவள்ளூர் ரோடு ஷோவில் திருமணமான தம்பதியை தவெக தலைவர் வாழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, பஞ்சட்டி பகுதியில் விஜய் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொன்னேரி தொகுதியில் ரோடு ஷோ நடத்தியபோது விஜய், அம்பேத்கர் படத்தை காட்டி ஓட்டு சேகரித்தார். அப்போது, ரோடு ஷோவில் திருமணமான கையோடு சாலையோரம் நின்றிருந்த தம்பதியை கண்டதும் வேனில் ஏற்றி விஜய் வாழ்த்தினார்.
அப்போது புதுமண தம்பதிகளை அழைத்து ஆசி வழங்கினார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
