அதிமுகவின் கோட்டையாக வர்ணிக்கப்பட்ட கொங்கு மண்டலத்தில் தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

TVK Vijay

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பாமக 4 தொகுதிகளிலும், IUML 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், விசிக 2 தொகுதிகளிலும், சிபிஎம் 2 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும், தேமுதிக 1 தொகுதியிலும், அமமுக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

தமிழகத்தில், குறிப்பாக அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மண்டலத்தில் தவெக கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 7 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 1,48,933 வாக்குகள் பெற்று 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தவெக மீதமுள்ள 4 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திரன் தோல்வியடைந்துள்ளார்.

ADVERTISEMENT

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் தவெக ஒரு தொகுதியிலும், திமுக கூட்டணி 1 தொகுதியிலும், அதிமுக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தவெகவும், 3 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில், ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் முத்துசாமி தோல்வியடைந்துள்ளார்.

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் தவெக 5 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. ராசிபுரம் தொகுதியில் களம் கண்ட அமைச்சர் மதிவேந்தன் தோல்வியடைந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 4 தொகுதிகளில் தவெகவும், தலா 2 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன.

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 2 தொகுதிகளில் திமுக கூட்டணியும், ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 6 தொகுதிகளில் தவெகவும், ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணியும், 3 தொகுதிகளில் திமுக கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன.ஒட்டுமொத்தமாக அதிமுகவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட கொங்கு மண்டலத்தில் தவெகவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் தவெக 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 15 தொகுதிகளிலும், திமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் நீலகிரி நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தவெகவின் ஆதிக்கம் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share