ரூ.270 கோடி போதைப் பொருள் வழக்கு.. விஜய் கட்சி நிர்வாகி பூபாலனிடம் 12 மணி நேரம் விசாரணை!

Published On:

| By Mathi

TVK Bhoopalan- Drug

நாகப்பட்டினத்தில் ரூ.270 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் விஜய்யின் ஆளும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பூபாலனிடம் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளைக் கடத்த முயன்றதாக பூபாலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.270 கோடி என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பூபாலனிடம் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

போதைப் பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, இலங்கையில் யாருக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டது, இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

பூபாலனின் மனைவி இலங்கையை சேர்ந்த பிரேமியா. இந்த தொடர்பை பயன்படுத்தி நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குப் போதைப்பொருட்களை பூபாலன் கடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பூபாலனை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து அக்கட்சி நீக்கியுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share