கனடாவுடனான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைந்துள்ள Lake Ontario-வின் பெயரை ‘Lake America’ என மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அமெரிக்க அரசின் துறைகள் மற்றும் அதிகாரப்பூர்வ அமைப்புகளில் புதிய பெயரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுடன் தொடர்புடைய ஏரி
Lake Ontario, வட அமெரிக்காவின் ஐந்து Great Lakes-ல் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தையும், மறுபுறம் கனடாவின் Ontario மாகாணத்தையும் ஒட்டி உள்ளது.
இந்த ஏரியைச் சார்ந்த சில நிர்வாக நடவடிக்கைகள் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளாலும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, அமெரிக்க அரசின் உத்தரவு மட்டும் மூலம் உலக அளவில் ஏரியின் பெயர் மாறிவிடாது.
கனடாவுக்கு கட்டாயம் இல்லை
டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு அமெரிக்க மத்திய அரசு மற்றும் அதன் அமைப்புகளுக்கே பொருந்தும். கனடா, சர்வதேச அமைப்புகள் அல்லது அமெரிக்க மத்திய அரசுக்கு வெளியேயுள்ள தனியார் நிறுவனங்கள் ‘Lake America’ என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இதற்கு முன்பு 2025-ல் Gulf of Mexico-வை ‘Gulf of America’ என அமெரிக்க அரசு மாற்றியபோதும் இதே நிலைதான் ஏற்பட்டது.
வர்த்தக மோதலுக்கு மத்தியில் அதிரடி முடிவு
அமெரிக்கா-கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் மூன்று நாட்கள் நடைபெற்ற நிலையில், உடன்பாடு ஏற்படாமல் முடிவடைந்தன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை தோல்விக்கு ஒன்றையொன்று குற்றம்சாட்டி வருகின்றன.
சுங்க வரி மற்றும் வர்த்தகக் கொள்கை தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்கனவே இரு நாடுகளின் உறவில் அழுத்தத்தை அதிகரித்துள்ள நிலையில், Lake Ontario பெயர் மாற்றம் குறித்த டிரம்பின் முடிவு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
