எம்.பிக்களை எப்படி நடத்த வேண்டும்? – ரவிகுமார் எம்.பி

Published On:

| By Pandeeswari Gurusamy

திருச்சியில் குத்துவிளக்கு ஏற்றுவதில் காங்கிரஸ் எம்.பி., – தவெக எம்.எல்.ஏ., இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்ட நிலையில் விசிக எம்.பி., ரவிக்குமார் எம்.பிக்களை எப்படி நடத்த வேண்டும்? என்று தனது தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

திருச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ரமேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், எம்.எல்.ஏ.க்கள் விக்னேஷ், கதிரவன், நவல்பட்டு விஜி, மற்றும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. கிறிஸ்டோபர் திலக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றுவதில் தவெக எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜிக்கும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. கிறிஸ்டோபர் திலக்கிற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விசிக எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் பதிவில், “நாடாளுமன்ற உறுப்பினர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து அவ்வப்போது ஒன்றிய அரசு மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவுகளை அனுப்பி வந்துள்ளது. அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதியன்று ஒரு உத்தரவை அனைத்து மாநில/ யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் :

ADVERTISEMENT

“ பொது நிகழ்ச்சி அல்லது கூட்டம்:

அரசு அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளுக்கு, அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் அழைக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

Protocol படி இந்திய அரசின் செயலாளர்கள் தகுதிக்கு மேலாக உறுப்பினர்கள் இடம்பெறுவதைக் கருத்தில் கொண்டு, ( proper order of seating on the dais should be made for Members keeping in view the fact that they appear above officers of the rank of Secretaries to Government of India in the Warrant of Precedence; ) பொது நிகழ்ச்சிகளில் அவர்களுக்காக முறையான மற்றும் வசதியான இருக்கை ஏற்பாடுகளும், மேடையில் சரியான இருக்கை வரிசையும் செய்யப்பட வேண்டும்.

தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படும் அழைப்பிதழ்கள் மற்றும் ஊடக நிகழ்வுகளில், அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள அத்தொகுதியின் உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறலாம். ஏதேனும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் பரவியிருந்தால், அவரது தொகுதியின் பகுதியாக உள்ள மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தவறாமல் அழைக்கப்பட வேண்டும்.”

[அலுவலக எண் 11013/4/2011-Estt. (A) நாள் 01.12.2011-இன் பத்தி 5(v)]”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த உத்தரவை சரியாகப் பின்பற்றும்படி மரியாதைக்குரிய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட ஆட்சியர்களும் வருவாய்த்துறை மற்றும் பிற அலுவலர்களுக்கு இந்த உத்தரவைத் தெரியப்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share