தொழிற்சங்கங்கள் ஜூலை 9-ல் பொதுவேலை நிறுத்தம்- தமிழகத்தில் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடுமா?

Published On:

| By Mathi

General Strike

மத்திய தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்தை ஜூலை 9-ந் தேதி நடத்துகின்றன. இந்தப் போராட்டத்துக்கு திமுகவின் தொழிற்சங்கமான தொமுசவும் ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழ்நாட்டில் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Trade Unions Call for Nationwide Strike on July 9

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது; மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் ஜூலை 9-ந் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ADVERTISEMENT

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு திமுக, இடதுசாரி கட்சிகளின் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழ்நாட்டில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் போது பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேநேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவின் தொழிற்சங்கத்தினர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் ஜூலை 9-ந் தேதி குறைந்த அளவில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படலாம் என தெரிகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share