ADVERTISEMENT

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

top 10 news today tamil May 7 2024

3வது கட்ட மக்களவைத் தேர்தல்!

மூன்றாவது கட்ட மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 93 தொகுதிகளுக்கு இன்று (மே 7) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

வெப்ப அலையும், கனமழையும் இருக்கு!

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போன்று கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

சவுக்கு சங்கர் மீதான மனு விசாரணை!

யூடியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை சைபர் கிரைம் போலீஸார் கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

ADVERTISEMENT

டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதல்!

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஊட்டியில் சித்தராமையா

லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடிந்ததை அடுத்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஊட்டியில் முதல்வர் சித்தராமையா ஓய்வெடுக்கிறார்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்!

பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு மே 7ஆம் தேதி இன்று காலை 11 மணி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் பெறுவது கட்டாயம்!

உதகை, கொடைக்கானல் சுற்றுலா செல்வோர் இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவது கட்டாயம்!

நாய் கடித்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை!

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நாய் கடித்து குதறிய 5 வயது சிறுமிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை நீட்டிப்பு!

தமிழக கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சுனிதா செல்லும் விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது!

58 வயதான சுனிதா வில்லியம்ஸ் உடன் 2 நாசா விண்வெளி வீரர்கள் செல்லும் விண்கலம் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 52வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் விற்பனையாகிறது.

ஹெல்த் டிப்ஸ்: சத்துப்பெட்டகம் நெல்லிக்காயைப் பிடிக்காதவர்களா நீங்கள்? இப்படிச் சாப்பிடலாமே..!

கிச்சன் கீர்த்தனா : காளான் வறுவல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share