குரூப் 1 தேர்வுக்கான காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் உயர் பதவிகளுக்கான குரூப் 1 தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
துணை ஆட்சியர், உதவி ஆணையர், வணிகவரித்துறை, துணைப் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட பதிவாளர், தொழிலாளர் பிரிவு உதவி ஆணையர் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு வரும் செப்டம்பர் 6ம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 2015ல்-74, 2017ல்-85, 2019ல் -181, 2020ல்-66, 2022ல்-93, 2024ல்-90, 2025ல்-78 பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், 2026 இல் வெறும் 26 பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று குரூப் 1 தேர்வுகளுக்கு தயாராகி வந்தவர்களும் அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த சூழலில் கூடுதலாக 20 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்வோம்.
