தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக தீயணைப்பு ஆணையத் தலைவராக இருந்த சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கடந்த சில தினங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஜெனரல் சீமா அகர்வால் ஐபிஎஸ் அவர்களுக்கு தீயணைப்பு ஆணையத் தலைவர் பொறுப்பும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயுதப்படை டிஜிபியாக இருந்த டாக்டர். சந்தீப் மிட்டல் ஐபிஎஸ், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர். ஆர். தினகரன் ஐபிஎஸ், தமிழ்நாடு ஆயுதப்படை கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ADGP) பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த மாற்றங்கள் குறித்த உத்தரவுகளை தமிழ்நாடு உள்துறை முதன்மைச் செயலர் கே. மணிவாசன் ஜூன் 18, 2026 அன்று பிறப்பித்துள்ளார்.
