தமிழகத்தில் 10 வகையான மளிகைப் பொருட்களை ரூ.200-க்கு விற்பனை செய்யும் சிறப்புத் திட்டம் இன்று (அக்டோபர் 30) தொடங்குகிறது. தமிழக அரசின் கூட்டுறவுத் துறை சார்பில் குறைந்த விலையில் தரமான மளிகைப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ரூ.200-க்கு என்னென்ன பொருட்கள் கிடைக்கும்?
இந்தத் தொகுப்பில் மொத்தம் 1,450 கிராம் எடையுள்ள 10 வகையான மளிகைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
- கடலைப் பருப்பு – 250 கிராம்
- பாசிப் பருப்பு – 250 கிராம்
- புளி – 250 கிராம்
- தனியா – 150 கிராம்
- பூண்டு – 150 கிராம்
- மிளகாய் – 100 கிராம்
- கடுகு – 100 கிராம்
- உடைத்த உளுத்தம் பருப்பு – 100 கிராம்
- சீரகம் – 50 கிராம்
- சோம்பு – 50 கிராம்
எங்கே கிடைக்கும்?
தமிழகத்தில் மாநகராட்சிகள் அல்லாத பகுதிகளில் உள்ள 128 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இந்த மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
10 வகையான மளிகைப் பொருட்களும் ஒரே தொகுப்பாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பையில் வழங்கப்படும்.
இந்தத் தொகுப்பில் உள்ள பொருட்கள் தனித்தனியாக விற்பனை செய்யப்படமாட்டாது. மொத்தமாக ரூ.200 கொடுத்து மட்டுமே வாங்க முடியும்.
குறைந்த விலையில் அத்தியாவசிய மளிகைப் பொருட்களைப் பெற விரும்பும் பொதுமக்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
