மின்வாரியத்தில் 8,000 காலிப்பணியிடங்கள் : டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடி நியமனம்!

Published On:

| By Kavi

TNEB-Office.

மின்வாரியத்தில் 8000 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகத்தில் காலியாக உள்ள 8000 பணியிடங்கள் இரண்டு கட்டமாக நிரப்பப்பட உள்ளன.

ADVERTISEMENT

2027 ஆம் ஆண்டு 5000 பணியிடங்களும் 2028 ஆம் ஆண்டு 3000 பணியிடங்களும் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்படும் கள உதவியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ஆண்டுக்கு ரூ.341.26 கோடி செலவாகும் என மின்வாரியத் தலைவர் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தார்.

ADVERTISEMENT

இதை பரிசீலித்து, 8000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒரு களப்பணியாளருக்கு அடிப்படை ஊதியமாக 18,800 – 59,900/- வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியப் பணிகளுக்காகக் காத்திருக்கும் ஐ.டி.ஐ. எலக்ட்ரீஷியன் மற்றும் வயர்மேன் தொழிற்பிரிவு படித்த இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு பயனைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி மூலமாக நேரடி நியமனம் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ,விரைவில் இதற்கான விரிவான அறிக்கை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share