சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைவராக சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் கார்த்திக் இன்று (அக்டோபர் 29) வெளியிட்ட உத்தரவில்,
”சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் பிரிவின் காவல்துறை இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர், ஐ.பி.எஸ்., சென்னை டான்ஜெட்கோ விஜிலன்ஸ் பிரிவின் தலைவராகவும்,
அமலாக்கப் பிரிவு சி.ஐ.டி. கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்த கே. சங்கர், ஐ.பி.எஸ்., தற்போது சென்னை சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரலாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியோடினர்.
சட்டம் ஒழுங்கை கேள்விகுறியாக்கிய இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் முதல்வர் விஜய்யின் தவெக அரசை நோக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்தநிலையில் சிறைத்துறை டிஜிபி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
