அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. ‘சொத்து விவரங்களைத் தாக்கல் செய்தால் மட்டுமே..’ தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Published On:

| By Pandeeswari Gurusamy

tamilnadu assembly

தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது சொத்துக்களின் விவரங்களை வரும் 31ஆம் தேதிக்குள் தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் கடந்த 5ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது அசைவு மற்றும் அசையா சொத்துக்கள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும் வரும் 31ஆம் தேதிக்குள் தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வேறு யார் பெயரிலாவது அரசு ஊழியர்கள் சொத்துக்களை வாங்கி இருந்தாலும், அது குறித்த விவரங்களையும் அந்த நபருக்கும் அரசு ஊழியருக்கும் இடையில் உள்ள உறவின் விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யும் ஊழியர்களின் பெயர்தான் பதவி உயர்வுப் பட்டியலில் இடம்பெறும்.

ADVERTISEMENT

சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யாதவர்கள், அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை மீறியவர்களாகக் கருதப்படுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் சேர்ந்த முதல் மூன்று மாதத்திற்குள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும், பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 9ம் தேதி திமுக ஆட்சியில் 5 ஆண்டு நடைமுறையை மாற்றி ஆண்டுதோறும் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

இந்த சூழலில், தற்போது தமிழக அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களைப் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share