பழனி அருகே மானூர் அரசு தொடக்கப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு இருந்த சம்பவம் அப்பகதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திற்குட்பட்ட மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் முதல் பருவத் தேர்வு விடுமுறை முடிந்து, கடந்த 5-ம் தேதி திங்கட்கிழமை பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
அப்போது பள்ளியில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டியைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் மனிதக் கழிவு இருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்துப் பெற்றோர்களுக்கோ அல்லது கிராம மக்களுக்கோ உடனடியாகத் தெரிவிக்கப்படாமல் மூடி மறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, பள்ளியில் பெற்றோர் – ஆசிரியர் கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றபோது உண்மை தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும் கிராம மக்களும் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமையாசிரியர் விளக்கம்:
இச்சம்பவம் குறித்துத் தலைமையாசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், “திண்டுக்கல், மானூர் பள்ளியில் மனிதமலம் கலக்கப்பட்ட விவகாரம்: பின்னணியில் சதி உள்ளதா? என்பது பற்றி விசாரணை தேவை!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டிக்குள் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகவும், இந்த நிகழ்வு இரு நாள்களாக மூடி மறைக்கப்பட்ட நிலையில் அதைக் கண்டித்து மாணவர்களின் பெற்றோர்களும், ஊர்மக்களுக்கும் போராட்டம் நடத்தியதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மனிதத்தன்மையற்ற இத்தகைய அருவருக்கத்தக்க செயல் கண்டிக்கத்தக்கது.
காலாண்டு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட போது, உணவு தயாரிப்பதற்கான ஏற்பாடுகளில் பள்ளி ஊழியர்கள் ஈடுபட்ட போது, இந்தக் கொடுமை தெரியவந்துள்ளது. உடனடியாக தண்ணீர் தொட்டியை பள்ளி நிர்வாகமே சுத்தம் செய்ததும், அந்தத் தொட்டியின் தண்ணீரில் சமைக்கப்பட்ட உணவை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுமோ? என்ற பெற்றோரின் அச்சத்தையும், கவலையையும் போக்கும் வகையில் மாணவர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் இன்று காலை உணவு அருந்தியதும் நம்பிக்கையளிக்கக் கூடியவை.
அதே நேரத்தில் இந்த நிகழ்வு வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டது ஏன்? இந்த நிகழ்வின் பின்னணியில் சதித் திட்டம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு காரணமானவர்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.
மானூர் தொடக்கப்பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்படாததும், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததாதும் தான் , இரவு நேரங்களில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து இத்தகைய செயல்களை செய்வதற்கு காரணம் ஆகும். இதைத் தடுக்கும் வகையில் மானூர் பள்ளி உள்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும். மானூர் அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டி மாற்றப்பட வேண்டும்.”என வலியுறுத்தி உள்ளார்.
