விஞ்ஞானிகள் ஹென்றி ககான், கென்சோ சோவாய்க்கு ’வேதியியல்’ நோபல் பரிசு!

Published On:

| By Mathi

Nobel Chemistry

2026-ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு விஞ்ஞானிகள் பிரான்ஸின் ஹென்றி பி. ககான் (Henri B. Kagan), ஜப்பானை சேர்ந்த கென்சோ சோவாய் (Kenso Soai) ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-ம் ஆண்டுக்கான உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு இதுவரை மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று அக்டோபர் 7-ம் தேதி வேதியியல் துறைக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நோபல் பரிசை வழங்கும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் வெளியிட்ட அறிவிப்பின்படி, வேதியியல் துறையில் சமச்சீரற்ற கரிமச் சேர்ம உருவாக்கத்தின் முக்கிய கண்டுபிடிப்புகளுக்காக (Discovery of non-linear effects and autocatalysis in asymmetric organic synthesis) இருவருக்கும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

என்ன கண்டுபிடித்தார்கள்?

நமது இடது கையும் வலது கையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தெரியும். ஆனால் இரண்டையும் ஒன்றின் மீது ஒன்றாக வைத்தால் அப்படியே பொருந்தாது. இதேபோல சில வேதிப்பொருட்களும் ஒன்றுக்கொன்று கண்ணாடி பிம்பம் போன்ற இரண்டு வடிவங்களில் இருக்கின்றன.

ADVERTISEMENT

இந்த இரண்டு வடிவங்களின் வேதியியல் அமைப்பு மிகவும் ஒன்றாக இருந்தாலும், அவை நமது உடலில் செயல்படும் விதம் வேறுபடலாம். குறிப்பாக மருந்துகள் தயாரிப்பில் இது மிகவும் முக்கியமானது. ஒரு வடிவம் தேவையான பலனைத் தரலாம்; மற்றொரு வடிவம் அதேபோல செயல்படாமல் இருக்கலாம் அல்லது தேவையற்றதாகவும் போய்விடலாம்.

எனவே, நமக்குத் தேவையான வடிவத்தை மட்டும் அதிக அளவில் உருவாக்குவது எப்படி? என்பது வேதியியல் உலகில் நீண்ட காலமாக நடந்து வரும் முக்கியமான ஆய்வு.

ADVERTISEMENT

இந்த ஆய்வுகளுக்காகவே தற்போது ஹென்றி பி. ககான் (Henri B. Kagan), கென்சோ சோவாய் (Kenso Soai) ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share