ஆயிரம் விளக்கு தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

 மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

ஆயிரம் விளக்கு வாக்காளர்கள்

ADVERTISEMENT

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

ஆயிரம் விளக்கு தொகுதி… இங்கே சிட்டிங் எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன் நாகநாதன் மறுபடியும் களம் காண்கிறார். அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதியும் ரொம்பவே கவனம் பெற்றிருக்கிறது. 2021 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் குஷ்புவை 32,200 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் எழிலன் தோற்கடித்தார்.

இந்த தொகுதியில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 1989, 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். 2011ல் பா.வளர்மதி வெற்றி பெற்றார்.

அதிமுகவின் முதுபெரும் தலைவர்கள் மதியழகன், சாதிக்பாட்சா, கேஏ கிருஷ்ணசாமி அகியோர் வெற்றி பெற்ற தொகுதி ஆயிரம் விளக்கு.

இந்த தேர்தலில் தவெக சார்பில் ஜேசிடி பிரபாகர், நாதக சார்பில் களஞ்சியம் ஆகியோர் களம் காண்கின்றனர்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி -41 %

அதிமுக கூட்டணி-29 %

தவெக- 24%

நாதக- 5 % வாக்குகள் பெறும்

திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? மத்திய சென்னை | Chennai Central | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share