உங்க துண்டு விஷயத்திலேயே தெரியுது – எடப்பாடியை விமர்சித்த சசிகலா

Published On:

| By Pandeeswari Gurusamy

ADMK

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் சசிகலா, விளாத்திகுளத்தில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியின் கட்டம் போட்ட துண்டு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பிரச்சாரத்தில் பேசிய அவர், “நான் முதலமைச்சராக்கி விட்டுச் சென்றவர், திமுகவையே தூக்கிச் சாப்பிட்டு விடுவார் போல், நாம் எப்போதும் திமுகவை விமர்சித்துக் கொண்டிருப்போம். இப்போது இவரும் அந்தக் கணக்கில் சேர்ந்து விட்டார்.

ADVERTISEMENT

புரட்சி தலைவர் எம்ஜிஆர், அம்மா காலத்தில் இருந்து நமது கட்சிக்கு என்று ஒரு துண்டு இருக்கும். இப்போது திமுக ஒரு புது ஸ்டைலில் கட்டம் போட்ட துண்டு ஒன்றை போட்டுள்ளது. அவர்கள் திமுக போட்டிருக்கிறார்கள், அது அவர்கள் இஷ்டம்.

நீங்கள் ஏன் கட்டம் போட்ட துண்டை போடுகிறீர்கள்? நமக்கு என்று நமது தலைவர் அம்மா என்ன செய்தார்களோ, அந்தத் துண்டைப் போட வேண்டியதுதானே?

ADVERTISEMENT

இதிலிருந்து நீங்கள் இருவரும் பேசி வைத்துக்கொண்டு செய்கிறீர்களா என்ற சந்தேகம் வரும் இல்லையா? நீங்கள் இருவரும் அவ்வளவு பக்கத்திலா இருக்கிறீர்கள்? நீங்கள் கட்சிக்காரர்களை மட்டும் பிரித்து வைத்துவிட்டு, நீங்கள் ஒன்றாக இருக்கிறீர்கள் என்பது, உங்கள் கழுத்தில் போட்டிருக்கும் துண்டு விஷயத்திலேயே தெரிகிறது” என்று விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share