திமுக ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவிலிருந்து விலக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து விலகி உள்ளார்.
இதுகுறித்து இன்று ( ஆகஸ்ட் 31) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில் “கழகத்தில் என் மீது நம்பிக்கை வைத்து மாவட்ட கழக பொறுப்பாளராகவும் பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகவும் வாய்ப்பு வழங்கினீர்கள். அதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றிகளை அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் ஆனால் நான் மாவட்ட கழக செயலாளராக செயல்படுவதற்கும் சட்டப்பேரவை தேர்தலில் எனக்கும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிற காரணத்தால் இனிமேலும் என்னால் கழகத்தில் பயணிக்க என் மனம் இடம் கொடுக்காத காரணத்தால் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழலில் வேறு எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை, அதற்கான முயற்சியும் நான் எடுக்கவில்லை. வேறு கட்சியில் இணையும் மனநிலையிலும் தற்போது நான் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
