தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் திருவள்ளூர் சட்டசபை தொகுதியை கைப்பற்றப் போவது யார்? என பார்க்கலாம்
மொத்த வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் ஆண்-பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 சட்டசபை தேர்தல் முடிவு

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவு

2026 மின்னம்பலம் சர்வே முடிவு

திருவள்ளூர் தொகுதியை பார்த்தோம்னா, சிட்டிங் எம்.எல்.ஏ. வி.ஜி, ராஜேந்திரன் மீண்டும் களம் காண்கிறார். போன 2021-ல் தோல்வி அடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பிவி ரமணா மீண்டும் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். 2001-ல் இருந்து விஜி ராஜேந்திரனும் 2006-ல் இருந்து பிவி ரமணாவும் தேர்தல் களத்தில் இருக்கிறாங்க.. இந்த முறை களம் எப்படி இருக்கிறதுன்னா திமுகவுக்கு ரொம்பவே சாதகமானதாக இருக்கிறதுன்னு சொல்லலாம்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 43%
அதிமுக கூட்டணி – 28%
தவெக- 20%
நாதக- 6% வாக்குகள் பெறும்
வி.ஜி. ராஜேந்திரன் எளிதாக வெற்றி பெறுவார் என கள நிலவரம் கூறுகிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
