தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
ஈரோடு கிழக்கு வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் தொகுதி மறுசீரமைப்பு செய்த பிறகு 2011 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக வேட்பாளர் வி.சி சந்திரசேகர் வெற்றி பெற்றார்.
2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற்றார்.
2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகு 2023ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். பின்னர் அவரும் மறைந்ததை தொடர்ந்து 2025 இல் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் இந்த தொகுதியில் கோபிநாத் பழனியப்பன் களம் காண்கிறார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே ஈரோடு கிழக்கில் உட்கட்சி பூசல் வெடித்தது
அதிமுக சார்பில் மனோகரன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் பாலாஜி, நாம் தமிழர் கட்சி சார்பில் தாண்டவமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக (காங்கிரஸ்)-45 %
அதிமுக- 33%
தவெக-13 %
நாதக -8 % வாக்குகள் பெறும்
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் முன்னிலை வகிக்கிறார்.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
