குமாரபாளையம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ.யார்?

Published On:

| By Kavi

Kumarapalayam Constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

குமாரபாளையம் வாக்காளர்கள்

ADVERTISEMENT
Kumarapalayam Constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Kumarapalayam Constituency Pre-Poll Survey 2026
Kumarapalayam Constituency Pre-Poll Survey 2026
Kumarapalayam Constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Kumarapalayam Constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Kumarapalayam Constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Kumarapalayam Constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Kumarapalayam Constituency Pre-Poll Survey 2026

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தங்கமணியின் தொகுதியாக குமாரபாளையம் பார்க்கப்படுகிறது. 

2011 முதல் இந்த தொகுதியில் தொடர்ந்து தங்கமணி வெற்றி பெற்று வருகிறார். 

2021 தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை 31,646 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

இந்த தேர்தலில் மீண்டும் தங்கமணி களம் காண்கிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் பாலு போட்டியிடுகிறார்.

தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி சார்பில் யுவராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்  

நமது சர்வே முடிவுபடி, 

திமுக- 36%
அதிமுக-43%
தவெக-12%
நாதக – 8% வாக்குகள் பெறும்

மீண்டும் தங்கமணி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? ஈரோடு | Erode | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share