தேனி சிறையில் இருந்து தப்பிய மேலும் 3 கைதிகள் சிக்கினர்!

Published On:

| By Mathi

Theni Jail-Arrest

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 13 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்ட சிறையில் இருந்து நேற்று (அக்டோபர் 26) இரவு 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தப்பிய கைதிகளைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஒரு கைதி முதலில் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், தேடுதல் நடவடிக்கையின்போது தேனியைச் சேர்ந்த சிலம்பரசன், மதுரையைச் சேர்ந்த ராஜா சிக்கந்தர், ராஜ்குமார் ஆகிய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தென்மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிதாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

தப்பிய 17 கைதிகளில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள எஞ்சிய 13 பேரையும் பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share