தேனி: ஜெயிலுக்கு பின்புறம் வனப்பகுதியில் பதுங்கி இருந்த ‘எஸ்கேப்’ கைதி சிக்கினார்!

Published On:

| By Mathi

Theni Jail-One Arrest

தேனி மாவட்ட சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் ஒருவரை போலீசார் பிடித்துள்ளனர். மற்ற 16 கைதிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையிலிருந்து நேற்று (அக்டோபர் 26) இரவு 17 கைதிகள் தப்பியோடினர்.

ADVERTISEMENT

சிறையில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதுபோல நாடகமாடியுள்ளனர். இதனால் சிறைக் காவலர் அறையைத் திறந்தபோது, அவரைத் தாக்கிவிட்டு 17 கைதிகளும் தப்பியோடினர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சிறைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

தப்பிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தெரிவித்திருந்தார்.

வனப்பகுதியில் சிக்கிய கைதி

இந்த நிலையில், சிறைக்குப் பின்புறம் உள்ள வனப்பகுதியில் கைதி ஒருவர் பதுங்கியிருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், பதுங்கியிருந்த கைதியைப் பிடித்தனர்.

ADVERTISEMENT

பிடிபட்டவர் மதுரையைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தப்பியோடிய மற்ற 16 கைதிகளைப் பிடிக்கத் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் தமிழக – கேரள எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share