தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (SPECIAL TNTET-2) அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு 2025 செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு முன்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு, தொடர்ந்து பணிபுரிந்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (அக்டோபர் 27) தொடங்கி நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
