’தளபதி 69’ இயக்குனர் இவரா?

Published On:

| By Minnambalam

thalapathy 69 director karthik subbaraj?

நடிகர் விஜய் தற்போது தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், தற்போது விஜய்யின் 69 வது படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

பீஸ்ட் படத்திற்கு பின் விஜய்யின் 69 வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விஜய் 69 படத்தை இயக்க போவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படம் மெகா பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

ADVERTISEMENT

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் விஜய்யை நேரில் சந்தித்து 2 முறை கதை சொல்லியிருக்கிறார். ஆனால், விஜய் அந்த கதைகளை நிராகரித்து விட்டார் என்று கார்த்திக் சுப்புராஜ் அவர்களே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜை நம்பி விஜய் தற்போது வாய்ப்பு கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. விஜய் 69 பட தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

– கார்த்திக் ராஜா

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

ADVERTISEMENT

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மருத்துவமனையில் அனுமதி: விஷம் கொடுக்கப்பட்டதா?

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share