தலைவர் 171: ரஜினிக்கு வில்லன் ராகவா லாரன்ஸ்!

Published On:

| By Selvam

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்குகிறார். தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தலைவர் 171 படம் முழுக்க முழுக்க ஒரு எக்ஸ்பிரிமெண்டல் படமாக இருக்கும் என்றும், ரஜினியின் வில்லனிசம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் லோகேஷ் கனகராஜ் பல இன்டர்வியூகளில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

2024 ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத துவக்கத்தில் தலைவர் 171 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க போகும் நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

நடின இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் லாரன்ஸ் தற்போது லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க போகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே விக்ரம் படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் முதலில் ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க தான் லோகேஷ் திட்டமிட்டாராம். அதன்பிறகு ஒரு சில காரணத்தினால் விக்ரம் படத்தில் லாரன்ஸ் நடிக்கவில்லை.

ஆனால் இந்த முறை நிச்சயமாக தலைவர் 171 படத்தில் வில்லன் ரோலில் லாரன்ஸ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘என்ன தடுக்காதீங்க’ ஹவுஸ்மேட்சை வச்சு செய்யும் பிரதீப்: ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?

சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்: ஓபிஎஸ் தரப்பு வாதம்!

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share