கோடை விடுமுறை ஸ்டார்ட்… மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?

Published On:

| By Kavi

Tamilnadu School Reopen Date

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. Tamilnadu School Reopen Date

2024-25 கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற்றது. 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 15 – 21வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற்றது. 4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 9 தொடங்கி 21 வரை நடைபெற்றது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு நாளை (ஏப்ரல் 24) நிறைவடைகிறது. 

இந்தநிலையில் இன்று (ஏப்ரல் 23) பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 25.04.2025 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியினை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30.04.2025 எனத் தெரிவிக்கப்படுகிறது.

2025-2026 ஆம் கல்வியாண்டில், 02.06.2025 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. Tamilnadu School Reopen Date

எனவே, 02.06.2025 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share