சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு: குற்றவாளிகளுக்கு ஜூன் 1 வரை கெடு!

By Kavi

|

Published on 30 Apr 2026, 4:43 PM

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் ஜூன் 1ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், முன்னாள் போலீசார் 9 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்தநிலையில், அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலு முத்து ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த கோரி தமிழக அரசு மற்றும் சிபிஐ சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று (ஏப்ரல் 30) விசாரணைக்கு வந்தது. 

ADVERTISEMENT

அப்போது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேரும் சிறையில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

அவர்களிடம் நீதிபதிகள், ‘வழக்கறிஞர்களை நியமனம் செய்துள்ளீர்களா?’ என்று கேள்வி எழுப்பினர். 

ADVERTISEMENT

இதற்கு அவர்கள், அடுத்த விசாரணைக்குள் வழக்கறிஞர்களை நியமித்து விடுவோம் என்று பதிலளித்தனர். 

தொடர்ந்து சிபிஐ மேல்முறையீடு மனுவின் நகலை குற்றவாளிகளுக்கு வழங்க பதிவாளருக்கு உத்தரவிட்டனர். 

இதைத்தொடர்ந்து முதல் குற்றவாளியான ஸ்ரீதர், மேல்முறையீட்டு மனுவை தயார் செய்ய 15 நாள் விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மேல்முறையீடு மனு தயாரிக்க சிறைதுறை போதிய வசதிகளை ஏற்படுத்தி தரும். சிறையிலேயே அனைத்து வசதிகளும் உள்ளதால் விடுமுறை தேவையில்லை என்று  தெரிவித்தனர்.

மேலும் நீதிபதிகள், ‘இந்த வழக்கு தமிழக முழுவதும் உற்று நோக்கப்படும் வழக்காகும். ஜூன் 1ம் தேதிக்குள் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 4ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel