முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நாளை (நவம்பர் 20) நடக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
நடப்புக் கல்வியாண்டில் (2023-24) 1.08.2023 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் (BT Staff Fixation) செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட (Surplus Post With Person) பட்டதாரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்துக்குள் உள்ள காலி பணியிடம், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான கலந்தாய்வு நாளை நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்வில் தவறாது கலந்து கொள்ள ஏதுவாக உபரி என்று கண்டறியப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே கலந்தாய்வு நடைபெறும் நாள், இடம், நேரம் தெரிவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கலந்தாய்வை எந்தவித புகாருக்கும் இடம் இல்லாத வகையில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ் : உங்கள் உடம்பில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதா?
சண்டே ஸ்பெஷல்: சாப்பிடும் உணவு, தொண்டைக் குழியிலேயே நிற்கிறதா… தீர்வு என்ன?