Is your body low in hemoglobin?

ஹெல்த் டிப்ஸ் : உங்கள் உடம்பில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதா?

டிரெண்டிங்

குறைந்த ஹீமோகுளோபின் அளவு இந்தியாவில், குறிப்பாக பெண்களிடையே மிகவும் பொதுவாக இருக்கிறது, எனவே ஆரோக்கியமான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க, இந்த விஷயங்களை பின்பற்றுங்கள். Is your body low in hemoglobin?

ஹீமோகுளோபின் மற்றும் சீரம் ஃபெரிடின் அளவை மேம்படுத்த தினையை தொடர்ந்து உட்கொள்வது அவசியம். இதனால் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை குறைகிறது, இது உலகளவில் அதிகரித்து வருகிறது.

கீரைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முருங்கைக் கீரையை வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பொன்னாங்கன்னிக் கீரை, புதினாக் கீரை, அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம் உற்பத்தியாகும். ஹீமோகுளோபின் அளவு உயரும்.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் அதிகமாக சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகள் இதில் அதிகமாக உள்ளது.

மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழமாக இது உள்ளது. Is your body low in hemoglobin?

உலர்ந்த திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து தினமும் காலையில் அருந்தி வந்தால் ஹீமோகுளோபின் பிரச்சனைகள் தீரும். இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த இது உதவும்.

அத்திப்பழத்தில் க்ளோரோஜெனிக் அமிலம் உள்ளதால் ஹீமோகுளோபின் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபட இது உதவுகிறது. 100 கிராம் அத்திபழத்தில் 2 மில்லி கிராம் இரும்புசத்து உள்ளது. மலச்சிக்கல் பிரச்னைகளில் இருந்து நம்மை இது காத்துக்கொள்ளும்.

சுபஸ்ரீ

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’ரஜினிகாந்த் தான் என்னுடைய‌ ராகவேந்திரா சுவாமி’: வெற்றிவிழாவில் ராகவா லாரன்ஸ் உருக்கம்!

World Cup 2023: உலகக்கோப்பை யாருக்கு? வெற்றியை தீர்மானிக்க போகும் டாப் 5 பிளேயர்கள்!

”ஆளுநரின் கடைந்தெடுத்த சர்வாதிகாரத்தனம்”: எடப்பாடிக்கு துரைமுருகன் பதில்!

மசோதா நிராகரிக்கப்பட்டதா…? நிறுத்தி வைக்கப்பட்டதா?- பேரவையில் விவாதம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *