2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) தாக்கல் செய்தார். சுமார் 2.33 மணி நேரம் அவர் பட்ஜெட் உரையாற்றினார். இதில் பல்வேறு முக்கிய அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. tamilnadu Budget 2025
அந்தவகையில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி, எந்த துறைக்கு அதிக நிதி, எந்த துறைக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.
1.பள்ளிக்கல்வித் துறைக்கு 46,767 கோடி ரூபாய்
2.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 29,465 கோடி ரூபாய்
3.நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 26,678 கோடி ரூபாய்
4.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 21,906 கோடி ரூபாய்
5.எரிசக்தித் துறைக்கு 21,178 கோடி ரூபாய்
6.நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு 20,722 கோடி ரூபாய்
7.போக்குவரத்துத் துறைக்கு 12,964 கோடி ரூபாய்
8.சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 8,597 கோடி ரூபாய்
9.உயர்கல்வித்துறைக்கு 8,494 கோடி ரூபாய்
10.வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 7,718 கோடி ரூபாய்
11.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 3,915 கோடி ரூபாய்
12.பொதுப் பணித் துறைக்கு 2,457 கோடி ரூபாய்
13.கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறைக்கு 1,980 கோடி ரூபாய்
14.தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 1,975 கோடி ரூபாய்
15.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 1,918 கோடி ரூபாய்
16.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு 1,563 கோடி ரூபாய்
17.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 572 கோடி ரூபாய். tamilnadu Budget 2025