”தமிழக அரசு பணியாளருக்கு தமிழ் தெரியாது எனில் என்ன செய்வது?” : நீதிமன்றம் காட்டம்!

Published On:

| By christopher

madurai high court on non tamil candidate

“தமிழ்நாடு அரசுப்பணியில் பணிபுரிய வேண்டுமெனில், தமிழ் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது. madurai high court on non tamil candidate

தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ”நான் மின் உற்பத்தி கழகம் தேனி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக கடந்த 2018 பணியில் சேர்ந்தேன். தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காததால், தமிழ் மொழித் தேர்வு இரண்டு ஆண்டுகளில் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாததால் என்னை பணியில் இருந்து நிறுத்தி வைத்தனர். இந்த நிலையில், நான் டிஎன்பிஎஸ்சி நடத்திய மொழி தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளேன். எனவே என்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்” என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் ஒரு தமிழர் என்பதால் இவருக்கு இந்த விதியை செயல்படுத்த தேவையில்லை” என்று கூறி அவரை பணியில் மீண்டும் சேர்க்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்ணிமா அமர்வு முன்பு இன்று (மார்ச் 10) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரரின் தந்தை கப்பல் படையில் வேலை பார்த்தவர். அவர் இடம் மாறுதல் செய்யப்பட்டதால், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்ததால், அவர் தமிழ் கற்கவில்லை. ஆனால் தற்போது மொழி தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார். எனவே பணி வழங்க மறுக்க கூடாது என வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசு விதிமுறைகளுக்கு எதிராக, தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணியாளர் வெற்றி பெறாததால் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

தமிழ் தெரியாது எனில் என்ன செய்வது? madurai high court on non tamil candidate

இதனையடுத்து நீதிபதிகள், ”தமிழர் என்கிறார். ஆனால் தமிழ் தெரியவில்லை. அவ்வாறு இருக்கும்போது எப்படி பணி வழங்க முடியும்? தமிழ்நாடு அரசின் அரசு பணியில் பணிபுரிய வேண்டும் எனில் தமிழ் மொழி பேசவும், எழுதவும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழக அரசின் பணியாளருக்கு தமிழ் தெரியாது எனில் என்ன செய்வது? அவர் எப்படி அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும்? இங்கு மட்டும் அல்ல, எந்த மாநிலத்தில் அரசு பணி புரிந்தாலும், அந்த மாநிலத்தின் மொழி தெரிந்து இருக்க வேண்டும். தெரியவில்லை எனில் என்ன செய்வது?

குறிப்பிட்ட கால அளவிற்குள், மாநில அரசு சார்பில் நடத்தப்படும் மொழி தேர்வில் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை எனில், பொது பணிக்கு ஏன் வருகிறீர்கள்?” என அதிரடி கேள்விகளை எழுப்பினர்.

தொடர்ந்து அனைத்து தரப்பினரும், இறுதி விவாத்திற்கு தயாராக வர வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share