தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என ஆரஞ்ச் அலர்ட் (Orange Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் பருவமழை தனது ஆட்டத்தை காட்ட தொடங்கியுள்ளது. இதனால் இன்று ஓரிரு இடங்களில் 7 முதல் 20 சென்டிமீட்டர் வரை மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என இந்திய வானிலை மையம் ‘ஆரஞ்ச்’ அலர்ட் விடுத்துள்ளது. கேரளா மாநிலத்தில் அதீத கனமழை கொட்டும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை
இதனையடுத்து 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கோவை
- நீலகிரி
- தேனி
- திண்டுக்கல்
ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் என 23-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை பெய்யும் போது தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கேரளாவில் ரெட் அலர்ட்
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடலோர கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அரபிக்கடலில் இருந்து பலத்த ஈரப்பதக் காற்று கேரளா நோக்கி வீசி வருகிறது.
இதன் காரணமாக, கேரளாவின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 20.4 சென்டிமீட்டருக்கும் அதிகமான அதீத கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால்
- காசர்கோடு
- கண்ணூர்
- கோழிக்கோடு
- வயநாடு
- மலப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- திருவனந்தபுரம்
- கொல்லம்
- ஆலப்புழா தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
