‘சம்பவ’காரன் கம்மிங்.. நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்.. நாளை மறுநாள் 29 மாவட்டங்களில் செம்ம ஆட்டம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Nilgiris Heavy Rain

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நிலையில் நாளை (அக்டோபர் 15-ந் தேதி) 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16-ந் தேதி சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 14-ந் தேதி) பிற்பகல் 2 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

தென்மேற்குப் பருவமழை நாளை நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. அதே நேரத்தில் தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் காணப்படுகிறது.

மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது.

ADVERTISEMENT

அக்டோபர் 14-ந் தேதி

இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

மொத்தம் 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 15-ந் தேதி

நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:

  • நீலகிரி
  • கோயம்புத்தூர்
  • தேனி
  • விருதுநகர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள்

இந்த 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

  • மயிலாடுதுறை
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • தஞ்சாவூர்
  • கடலூர்
  • தென்காசி
  • கன்னியாகுமரி
  • கள்ளக்குறிச்சி
  • சேலம்
  • திருச்சிராப்பள்ளி
  • காஞ்சிபுரம்
  • செங்கல்பட்டு
  • ராணிப்பேட்டை
  • திருப்பூர்
  • திண்டுக்கல்
  • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மொத்தம் 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 16-ந் தேதி

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

  • நீலகிரி
  • கோயம்புத்தூர்
  • ஈரோடு
  • திருப்பூர்
  • திண்டுக்கல்
  • தேனி
  • விருதுநகர்
  • தென்காசி
  • கன்னியாகுமரி
  • ராமநாதபுரம்
  • சிவகங்கை
  • திருச்சிராப்பள்ளி
  • நாமக்கல்
  • தர்மபுரி
  • கிருஷ்ணகிரி
  • சேலம்
  • திருவண்ணாமலை
  • கள்ளக்குறிச்சி
  • விழுப்புரம்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • சென்னை
  • திருவள்ளூர்
  • ராணிப்பேட்டை
  • கடலூர்
  • மயிலாடுதுறை
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • தஞ்சாவூர்
  • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மொத்தம் 29 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 17-ந் தேதி

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

  • நீலகிரி
  • கோயம்புத்தூர்
  • தேனி
  • திண்டுக்கல்
  • மதுரை
  • திருப்பூர்
  • காஞ்சிபுரம்
  • ராணிப்பேட்டை
  • கள்ளக்குறிச்சி
  • மயிலாடுதுறை
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • தஞ்சாவூர்
  • கடலூர்
  • ஈரோடு
  • தர்மபுரி
  • கிருஷ்ணகிரி
  • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மொத்தம் 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 18-ந் தேதி

  • நீலகிரி
  • கோயம்புத்தூர்
  • மயிலாடுதுறை
  • தஞ்சாவூர்
  • திருவாரூர்
  • நாகப்பட்டினம்
  • காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

மொத்தம் 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 19-ந் தேதி

  • நீலகிரி
  • கோயம்புத்தூர்
  • மதுரை
  • சிவகங்கை

மொத்தம் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 20-ந் தேதி

  • நீலகிரி
  • கோயம்புத்தூர்
  • திருப்பூர்
  • திண்டுக்கல்

மொத்தம் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 14 முதல் 20-ந் தேதி வரையிலான நாட்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

சென்னையில் மழை எப்படி?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

இதனிடையே அக்டோபர் 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தமிழகத்தில் இயல்பைவிட 48% குறைவாக மழை பெய்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 98% குறைவாக மழை பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் திருநெல்வேலியில் இயல்பைவிட 180%, தென்காசியில் 41%, நீலகிரியில் 34% கூடுதலாக மழை பெய்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கான தனி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share