10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? எந்த தேதியில் எந்த சப்ஜெக்ட் எக்ஸாம்? ரிசல்ட் எப்போது?

Published On:

| By Pandeeswari Gurusamy

10,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை இன்று (அக்டோபர் 14) தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், இதில் 2026–2027-ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு 3.3. 2027 தொடங்கி 29.03.2027 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. செய்முறைத் தேர்வு 8.2. 2027 அன்று தொடங்கி 18.02.2027 வரை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

பதினொன்றாம் வகுப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு 05.03.2027 அன்று தொடங்கி 01.04.2027 வரை நடைபெற உள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு 19.02.2027 தொடங்கி 26.02.2027 வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு 17.03.2027 தொடங்கி 12.04.2027 வரை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 07.05.2027 அன்றும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் 20.05.2027 அன்றும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

12ம் வகுப்புக்கான மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை

11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை

10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share