தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான சூழல் உருவாகி வருகிறது. இதனிடையே நாளை (அக்டோபர் 14-ந் தேதி) முதல் அக்டோபர் 19-ந் தேதி வரை 6 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 13-ந் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 2 நாட்களில் தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலகுவதற்குச் சாதகமான சூழல் உருவாகி வருவதாகத் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் தென்னிந்தியாவில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சூழலும் உருவாகி வருகிறது.
தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை முதல் கனமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 14-ந் தேதி தென் மாவட்டங்களில் தொடங்கும் கனமழை எச்சரிக்கை, அடுத்தடுத்த நாட்களில் மேற்கு, மத்திய மற்றும் வட தமிழக மாவட்டங்களுக்கும் விரிவடைகிறது.
இதன்படி அக்டோபர் 14 முதல் 19-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 14
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- கன்னியாகுமரி
இந்த 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 15
- தென்காசி (மலைப்பகுதிகள்)
- திருநெல்வேலி (மலைப்பகுதிகள்)
- கன்னியாகுமரி
- மதுரை
- திண்டுக்கல்
- திருப்பூர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- ஈரோடு
- சேலம்
- நாமக்கல்
- கரூர்
- திருச்சிராப்பள்ளி
- பெரம்பலூர்
- அரியலூர்
- புதுக்கோட்டை
- நாகப்பட்டினம்
இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 16
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- தேனி
- திண்டுக்கல்
- திருச்சிராப்பள்ளி
- நாமக்கல்
- கரூர்
- அரியலூர்
- பெரம்பலூர்
- சேலம்
- ஈரோடு
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- திருவண்ணாமலை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- புதுக்கோட்டை
- சிவகங்கை
- ராமநாதபுரம்
இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 17
- திண்டுக்கல்
- திருச்சிராப்பள்ளி
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- ஈரோடு
- சேலம்
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- வேலூர்
- ராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- பெரம்பலூர்
- அரியலூர்
இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 18
- திருவண்ணாமலை
- புதுக்கோட்டை
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- மதுரை
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- ஈரோடு
- நாமக்கல்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- கடலூர்
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- காரைக்கால்
இந்த மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 19
- திண்டுக்கல்
- திருச்சிராப்பள்ளி
- கரூர்
- அரியலூர்
- பெரம்பலூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- ராணிப்பேட்டை
- காஞ்சிபுரம்
- கிருஷ்ணகிரி
- தர்மபுரி
- ஈரோடு
- திருப்பத்தூர்
- நாமக்கல்
- சேலம்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- தஞ்சாவூர்
இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடி, மின்னல்… பலத்த காற்று
அக்டோபர் 15 முதல் 19-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
