டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரரை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் சூர்யகுமார் யாதவ்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆண்களுக்கான டி20 பேட்டிங் தர வரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 76 ரன்கள் குவித்ததால் இரண்டு இடங்கள் முன்னேறி 816 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 818 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 794 புள்ளிகளுடன் உள்ளார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் டாப் 10 இடத்துக்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்
