அன்புமணிக்கு அறுவை சிகிச்சை : என்ன ஆச்சு?

Published On:

| By Kavi

அப்பல்லோ மருத்துவமனையில் பாமக தலைவர் அன்மணி ராமதாஸுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அன்மணி ராமதாஸ் சமீப நாட்களாக பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் அவருக்கு கால் மூட்டில் தொடர்ந்து வலி இருந்து வந்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று பரிசோதிக்கப்பட்டதில், சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். அதன்படி அக்டோபர் 18ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து பாமக தலைமை வெளியிட்ட அறிக்கையில், ” பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பிய அவர், நலமுடன் உள்ளார்.

அடுத்த இரு வாரங்களுக்கு உடலியக்கப் பயிற்சியும் (பிசியோதெரபி), ஓய்வும் எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share