”நல்ல தகவல்கள் வருகின்றன” : முதல்வர் விஜய்க்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு!

Published On:

| By Kavi

முதல்வர் விஜயின் செயல்பாடுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா அமர்வில் தமிழகம் தொடர்பான குற்ற வழக்கு ஒன்று நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. 

ADVERTISEMENT

அப்போது தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் பி கருணாகரன் ஆஜராகியுள்ளார்.

அவர், “இந்த வழக்கில் ஏற்கனவே நான் மனுதாரருக்காக ஆஜராகி இருக்கிறேன். ஆனால் தற்போது அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ளதால் இந்த வழக்கின் பொறுப்பை வேறு ஒருவருக்கு மாற்ற வேண்டும். வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்” என்று கூறினர். 

ADVERTISEMENT

இதை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்த நீதிபதிகள் தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 

மேலும், ”தமிழகத்தில் இன்னும் சில விஷயங்கள் சீரடைய வேண்டியுள்ளது என்றாலும், தற்போதைக்கு முதல்வரின் செயல்பாடுகள் குறித்து நல்ல தகவல்கள் எங்களுக்கு கிடைக்கின்றன. அந்த வகையில் தமிழகத்துக்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share