ராஜ்மோகனுக்கு வந்த போன்கால்- தாராபுரம் தவெக வேட்பாளரின் கண்ணீர்.. ‘ஸ்வீட் ப்ரோ’ விஜய்யின் ஆறுதல்.. செம்ம நடிப்பு.. கனிமொழி விளாசல்

Published On:

| By Mathi

Kanimozhi DMK

தாராபுரம் பிரசார கூட்டத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவின் கண்ணீர்விட்டதும் முதல்வர் விஜய் ஆறுதல் கூறியதும் ”நடிப்பு” என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி. விமர்சித்துள்ளார்.

மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பிரசாரம் செய்த கனிமொழி பேசியதாவது: நான் விஜய்யை அதிகம் திட்ட முடியாது.. என் அண்ணனை அவர் அங்கிள் என கூறியிருக்கிறார்.. அதனால் அவரை ‘அன்பு தம்பி’ என்று அழைக்கிறேன்.. அவர் ‘ஸ்வீட் ப்ரோ’.

ADVERTISEMENT

இன்றைக்கு மேடையில்.. தாராபுரத்தில் நல்ல நாடகம் அரங்கேறியது.. இங்கே ப்ரோ விஜய் நிற்கிறார்.. பக்கத்தில் அங்கே வேட்பாளர் சத்யபாமா நிற்கிறார்.. அதைத்தாண்டி அமைச்சர் ராஜ்மோகன் நிற்கிறார்.

அந்த வேட்பாளர் சத்யபாமா, சாதாரணமாக பேசுறாங்க.. வாக்கு கேட்கிறாங்க.. ஓட்டு போடுங்கன்னு பேசுறாங்க..

ADVERTISEMENT

திடீர்னு அமைச்சர் ராஜ்மோகனுக்கு போன் வருது.. அவர் அந்த போனை எடுத்து பேசிட்டு கிடுகிடுன்னு வந்து.. அம்மையார் சத்யபாமா காதுகிட்ட ஏதோ ஒன்று சொல்கிறார்..

அவர் சொன்ன அடுத்த நொடி.. அந்த அம்மா கண்ணில் இருந்து தண்ணீர் வருகிறது.. ஒரு பெண் என்றும் பாராமல் என்ன என்னவோ பேசுறாங்கன்னு அழறாங்க.. கட்.. அடுத்த ஷாட்.. உடனே ப்ரோ விஜய் ஓடி வந்து சத்யபாமாவை கட்டி அணைத்து ஆறுதல் சொல்கிறார்.. இதைவிட… பெரிய நடிப்பை அரசியலில் நாங்க பார்த்ததே இல்லை.. இப்படிப்பட்ட நடிகர்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி. பேசினார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share