முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்கும்.. சூப்பர் ஃபுட் லிஸ்ட் இதோ!

Published On:

| By Santhosh Raj Saravanan

superfoods for Improve hair growth and health

முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை (Hair Growth) ஊக்குவிக்கும் சில உணவு வகைகள் குறித்துப் பார்ப்போம்.

நம் அனைவருக்கும் ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்கிற ஆசை எப்போதும் இருக்கும். பலரும் மாசுபாடு, மன அழுத்தம், ஊட்டச்சத்து இல்லாமை காரணமாக முடி உதிர்வு, முடி பொலிவின்மை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இதற்காக விலை உயர்ந்த சீரம்கள், மருந்துகள், மாத்திரைகள், ஷாம்புகள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதற்கான ரிசல்ட் என்னவோ குறைவாக உள்ளதுடன், அவற்றில் பக்க விளைவுகள் அதிகமாக உள்ளன.

ADVERTISEMENT

ஆனால், முறையான ஊட்டச்சத்து முடி வளர்ச்சியை மேம்படுத்துவது (superfoods for Improve hair)  மட்டுமல்லாமல், முடி உதிர்தலைத் தடுத்து, புதிய முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. ஆகவே, முடிக்கு ஊட்டம் அளிக்கும் சில உணவுப் பொருட்களை உங்களுக்கு பட்டியலிடுகிறோம்.

முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

நெல்லிக்காய்

ADVERTISEMENT

நெல்லிக்காய் முடிக்கு மிகவும் பயனுள்ள சூப்பர் ஃபுட்களில் ஒன்றாகும். இதில் வைட்டமின் சி (Gooseberry vitamin c) நிறைந்துள்ளது, இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, பொடுகுப் பிரச்சனையையும் குறைக்கிறது.

வெந்தயம்

ADVERTISEMENT

வெந்தயத்தில் புரதம், இரும்புச்சத்து மற்றும் நிக்கோடினிக் அமிலம் ஆகியவை உள்ளன. இவை முடி வேர்களை வலுப்படுத்தி (Fenugreek for hair) முடி உதிர்வதைத் தடுக்கின்றன.

கீரைகள்

கீரைகளில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஃபோலிக் அமிலம் (Folic acid) ஆகியவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி உதிர்வதைத் தடுக்க உதவுகின்றன.

வால்நட்ஸ்

வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பயோட்டின் (Walnuts Benefits)  மற்றும் வைட்டமின் E ஆகியவை நிறைந்துள்ளன. இவை முடியில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, முடி உடைவதைத் தடுக்க உதவுகின்றன.

பயிறு வகைகள்

பயிறு வகைகள் புரதச்சத்தின் (Protein-rich foods) சிறந்த மூலமாகும். அவற்றில் இரும்புச்சத்து மற்றும் துத்தநாகமும் நிறைந்துள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, முடி உதிர்தலையும் குறைக்கின்றன.

கேரட்

கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ (Carrots for hair) ஆகியவை உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன, இது நல்ல முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

தேங்காய்

தேங்காயில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் (Benefits of coconut) உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, முடியை வலுப்படுத்த உதவுகின்றன.

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் ஒமேகா-3 (pumpkin seeds hair) கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோனை ஒழுங்குபடுத்துவதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்க உதவுகின்றன.

முட்டைகள்

முட்டைகளில் புரதம், பயோட்டின் மற்றும் வைட்டமின் டி (egg protein hair) ஆகியவை நிறைந்துள்ளன. அவை முடியின் வேர்களை வலுப்படுத்தி, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share