உருளைக் கிழங்கை நீண்ட நாள் சேமித்து வைக்க.. இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

Published On:

| By Santhosh Raj Saravanan

Super tips for storing potatoes for a long time

உருளைக் கிழங்கை சில நுட்பங்களை பயன்படுத்தி நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியும்.

நமது சமையலறையில் அத்தியாவசியமான காய்கறிகளில் உருளைக் கிழங்கு முக்கியமானதாக உள்ளது. உருளைக் கிழங்கு முன்கூட்டியே முளைத்தாலோ அல்லது அழுகிப் போனாலோ அது சுவையைக் கெடுப்பதோடு உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும். அதனால் உருளைக் கிழங்கை ப்ரெஷ்ஷாக வைத்திருக்க வேண்டியது அவசியம். சில நுட்பங்களையும் பின்பற்றுவதன் மூலம் உருளைக் கிழங்கை (potatoes storing) வாரக்கணக்கில் புத்துணர்ச்சியுடனும் அழுகாமலும் வைத்திருக்கலாம்

ADVERTISEMENT
சூரிய ஒளியில் வைக்க வேண்டாம்

உருளைக் கிழங்குகளை ஒருபோதும் நேரடி சூரிய ஒளியில் (Never store potatoes in sunlight) சேமிக்க வேண்டாம். பிரகாசமான ஒளியும் வெப்பமும் உருளைக்கிழங்கில் பச்சையம் உற்பத்தியை அதிகரித்து வேர்கள் முளைக்கக் காரணமாகின்றன. உருளைக் கிழங்குகளின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க, இருண்ட மற்றும் குளிர்ச்சியான இடமே அதனை சேமிப்பதற்குச் சிறந்தது.

நெகிழி பைகள் வேண்டாம்

உருளைக் கிழங்குகளை சேமிப்பிற்காக நெகிழிப் பைகளைப் (avoid using plastic bags) பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை காற்றோட்டத்தைத் தடுக்கின்றன. உருளைக் கிழங்குகளை எப்போதும் சணல் சாக்குகளிலோ அல்லது  கூடைகளிலோ சேமித்து வைக்க வேண்டும். இது காற்றோட்டத்திற்கு வழிவகுக்கும்.

ADVERTISEMENT
வெங்காயத்துடன் சேர்த்து சேமிக்க வேண்டாம்

உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் ஒருபோதும் ஒன்றாகச் சேமிக்கக் கூடாது. வெங்காயம் ஒரு குறிப்பிட்ட வாயுவை வெளியிடுகிறது, அது உருளைக்கிழங்கில் முளைக்கும் ( never store potatoes and onions together) செயல்முறையைத் துரிதப்படுத்துகிறது. வெங்காயம், உருளைக் கிழங்கை தனித்தனி கூடைகளில் சேமிப்பது, அவற்றின் சேமிப்புக் காலத்தை கணிசமாக அதிகரிக்கிறது. உருளைக்கிழங்குகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

கழுவிய பிறகு சேமிக்க வேண்டாம்

ஈரம் உருளைக்கிழங்கின் மிகப் பெரிய எதிரி. ஆகவே, அவற்றைக் கழுவிய பிறகு ஒருபோதும் சேமித்து வைக்க வேண்டாம். உருளைக் கிழங்குகள் அழுக்காக இருந்தால் துணியால் துடைத்து சேமிக்கவும். சமையலுக்கு முன்பு மட்டுமே கழுவ வேண்டும். ஈரமான (Humidity) உருளைக்கிழங்குகளில் பூஞ்சை எளிதில் தாக்கும், மேலும் அவற்றில் வேர்கள் உருவாகி, அவை உருளைக்கிழங்கைப் பாழாக்கிவிடும் வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT
சேமிக்கும் முன் செய்ய வேண்டியது

உருளைக் கிழங்குகளை சேமித்து வைப்பதற்கு முன் அவற்றை நன்கு கவனிக்க வேண்டும். ஒரு உருளைக்கிழங்கில் ஏற்கனவே புள்ளிகள் இருந்தாலோ அல்லது அது லேசாக அழுகியிருந்தாலோ, உடனடியாக அதை மற்றவற்றிலிருந்து தனியாக (potato storage tips) பிரித்துவிட வேண்டும். கெட்டுப்போன ஒரே ஒரு உருளைக்கிழங்கு கூட, சுத்தமான உருளைக்கிழங்குகளை அழுகச் செய்துவிடும்.

ப்ரிட்ஜில் சேமிக்க வேண்டாம்

உருளைக் கிழங்குகளை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைப்பது ஒரு பெரிய தவறாகும். குளிர்சாதனப் பெட்டியின் அதிக வெப்பநிலை, உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றி, அவை இனிப்பாகவும் கருமையாகவும் மாறக் காரணமாகிறது. குளிர்சாதனப் பெட்டிக்குப் பதிலாக, வெப்பநிலை இயல்பாக இருக்கும் இடத்தில் உருளைக் கிழங்குகளை (keep potatoes fresh) சேமித்து வைக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share