விஜய் மேடையும் சினிமா படப்பிடிப்பும்.. சிபிஐ எம்.பி. சுப்பராயன் விளாசல்

Published On:

| By Mathi

Subbarayan CPI Vijay

தாராபுரத்தில் முதல்வர் விஜய்யின் பிரசார மேடையும் சினிமா படப்பிடிப்பு மையமாக்கப்பட்டதாக சிபிஐ எம்.பி. சுப்பராயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சுப்பராயன் எம்.பி. கூறியுள்ளதாவது: பொதுக் கூட்டமேடைகளும் சினிமா படப்பிடிப்பு மையங்களாக்கப்பட்டு வருவதை, தாராபுரம் தவெக மேடையில் தமிழ்நாடு கண்டது! எக்காரணம் கொண்டும் ஒருபெண்ணை இழிவுபடுத்துவதை அனுமதிக்கவே முடியாது!

ADVERTISEMENT

அதே நேரத்தில் ஜனநாயக அரசியல் அமைப்பின் சாரத்தை, ஒருபெண் MLA இழிவுபடுத்தியதை எப்படி ஏற்க முடியும்? தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி. சத்தியபாமா, MLA பதவியை ஏன் உடனே ராஜினமா செய்தார்? ராஜினமா செய்த வேகத்திலேயே தவெகவில் ஏன் சேர்ந்தார்?

தவெகவின் எந்தக்கொள்கை அவரை அவ்வளவு வேகமாக ஈர்த்தது? திருமதி சத்தியபாமா, வாக்களித்த தாராபுரம் தொகுதி மக்கள் முன் குற்றவாளியாக நிற்கிறார்?

ADVERTISEMENT

அவரை ராஜினமா செய்ய வைத்து ஜனநாயக விரோத குற்றவாளி ஆக்கியது முதல்வர் விஜய் செய்த குதிரை பேர திருவிளையாடல்! திருமதி சத்தியபாமாவும், முதல்வர் விஜயும் தான் இதற்கு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு சுப்பராயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share