டிரம்ப், மோடியிலிருந்து தமிழ்நாட்டு அதிகாரிகள் வரை, அச்சப்பட்டுக் கலங்குவது, மார்க்சிய தத்துவஞானத்தை தாங்கி நிற்கிற கம்யூனிஸ்டுகளைக் கண்டு தான் என சுப்பராயன் எம்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பராயன் தனது முகநூல் பதிவில்,
“தமிழ்நாட்டில் தவெக ஆட்சி நடக்கிறது என்பதுமுழு உண்மையல்ல!
தோற்றத்தில் தவெக ஆட்சி! ஆனால், உள்ளடக்கத்தில் அதிகார வர்க்கத்தின் ஆட்சிதான் நடக்கிறது!
அந்த அதிகாரவர்க்கத்தை இயக்குவது சங்கிகளின் கருத்தோட்டங்களே!
அதனால் தான் கம்யூனிச சிந்தனை கொண்ட மாணவர்களைக் குறிவைத்துக் கணக்கெடுக்கிறது!
ஆட்சியாளர்களில் இருவகை உண்டு! ஒன்று, ஆட்சியாளர்களை அதிகாரிகள் இயக்குவது!
இரண்டாவது, அதிகாரிகளை ஆட்சியாளர்கள் இயக்குவது!
இதில் முதல் வகையைச் சேர்ந்ததே தவெக அமைச்சரவை!
கம்யூனிஸ்டு மாணவர்களைக் குறிபார்த்துப் பட்டியலிட்டது குறித்து முதல்வர் வாயே திறக்கவில்லையே ஏன்?
முதல்வர் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்!
USA வின் டிரம்ப் + இந்திய மோடியிலிருந்து தமிழ்நாட்டு அதிகாரிகள் வரை, அச்சப்பட்டுக் கலங்குவது, மார்க்சிய தத்துவஞானத்தை தாங்கி நிற்கிற கம்யூனிஸ்டுகளைக் கண்டு தான்!
கார்ப்பரேட்டுகளும், அந்திய நேரடி முதலீடுகளும், ஏகாதிபத்தியங்களும் அஞ்சி நடுங்கிச் சாகட்டும்!
தொழிலாளி – விவசாய வர்க்க ஒற்றுமைச் சின்னமான செங்கொடி அதன் போர்க்கொடியே!” என தெரிவித்துள்ளார்.
கே.சுப்பராயன் MP
