தாராபுரத்தில் ஸ்டாலின் ரோடு ஷோ!

Published On:

| By Kavi

தாராபுரத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி வருகிறார்.

வரும் அக்டோபர் 6ஆம் தேதி தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு 5 முனை போட்டி நிலவும் நிலையில், திமுக சார்பில் சுகன்யா களம்காண்கிறார்.

ADVERTISEMENT

அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தாராபுரம் சென்றுள்ளார்.

இந்நிலையில், அமராவதி சிலையில் இருந்து பொள்ளாச்சி சாலை பெரியகடை வீதி வழியாக திமுக தலைவர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டு, வாக்குசேகரித்து வருகிறார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இன்று (அக்டோபர் 2) மாலை உடுமலை சாலையில் தனியார் விடுதி அருகே பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

முன்னதாக சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வருக்கு முன்னாள் அமைச்சரும்  திமுக மேற்கு மண்டலப் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி வரவேற்பு அளித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share