மத்திய அரசு வேலைவாய்ப்பு, எஸ்.எஸ்.சி அறிவிப்பு
ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (Staff Selection Commission – SSC) 2026ஆம் ஆண்டிற்கான செலக்ஷன் போஸ்ட் பேஸ் 14 (Selection Post Phase XIV) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 3003 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எந்த லெவல் மாணவர்கள் அப்ளை பண்ணலாம்?
இந்த வேலைவாய்ப்பின் பெரிய ஹைலைட் என்னவென்றால் 10ஆம் வகுப்பு (Matric), 12ஆம் வகுப்பு (Higher Secondary), பட்டப்படிப்பு (Graduation), மூன்று லெவல் மாணவர்களுக்கும் தனித்தனி பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்சேர்ப்பில் லாபரட்டரி அசிஸ்டன்ட் (Laboratory Assistant), அப்பர் டிவிஷன் கிளார்க் (Upper Division Clerk – UDC), டெப்யூட்டி ரேஞ்சர் (Deputy Ranger), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) போன்ற பல்வேறு பணிகள் உள்ளன.
அறிவிப்பின்படி விண்ணப்பிக்க கடைசி தேதி மே 4, 2026, ஆன்லைன் (Online) முறையில் மட்டுமே அப்ளை பண்ண முடியும்.
வயது வரம்பு: இந்த வேலைவாய்ப்பில் குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சம் 25 முதல் 30 வயது (பதவியின்படி மாறுபடும்) என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளம்
இந்த பணிகளுக்கு:
- குரூப் B: 9,300 – 34,800 ரூபாய்
- குரூப் C: 5,200 – 20,200 ரூபாய்
மேலும் அரசு அலவன்ஸ்கள் வழங்கப்படும்.
இந்த ஆட்சேர்ப்பில் தேர்வு கம்ப்யூட்டர் பேஸ்ட் டெஸ்ட் (Computer Based Test – CBT), ஸ்கில் டெஸ்ட் (Skill Test – தேவையானால்), டாக்குமெண்ட் வெரிபிகேஷன் (Document Verification) மூலம் நடைபெறும்.
இது மத்திய அரசு வேலை, 10ஆம், 12ஆம், டிகிரி மாணவர்களுக்கு ஒரே தேர்வு, இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு என்பதால் மிகப்பெரிய வாய்ப்பாகும்.
எஸ்.எஸ்.சி செலக்ஷன் போஸ்ட் 2026 வேலைவாய்ப்பு, அரசு வேலை தேடுபவர்களுக்கு ஒரு கோல்டன் வாய்பாக பார்க்கப்படுகிறது.
