மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆயுத தொழிற்சாலை (Ordnance Factory) நிறுவனம், 2026ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு, குறிப்பாக ஐ.டி.ஐ (ITI – Industrial Training Institute) முடித்தவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பில் டேஞ்சர் பில்டிங் வொர்க்கர் (Danger Building Worker) பணிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. மொத்தம் 350 காலியிடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வித் தகுதி
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஐ.டி.ஐ (ITI – Industrial Training Institute) முடித்திருக்க வேண்டும் என்பது முக்கிய தகுதியாகும்.
வயது வரம்பு: இந்த ஆட்சேர்ப்பில் குறைந்தபட்ச வயது 18, அதிகபட்சம் 40 வயது, அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
இந்த வேலை ஆரம்பத்தில் 1 ஆண்டு (1 year contract), பின்னர் 4 ஆண்டுகள் வரை நீட்டிப்பு (extension) வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மூலம் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Official Website) இருந்து, அப்ளிகேஷன் ஃபார்மை (Application Form) பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவித அப்ளிகேஷன் ஃபீ (Application Fee) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்க கடைசி தேதி, மே 1, 2026 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு டிபென்ஸ் துறையில் இந்த வேலை ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு ஒரு நல்லநேரடி வாய்ப்பு. மேலும் தேர்வு சுலபம் (exam இல்லாமல் selection) என்பது கவனிக்கப்பட வேண்டியது. ஆயுத தொழிற்சாலை வழங்கும் இந்த வேலைவாய்ப்பு 2026, ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பாகும்.
