மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு (Central Government Jobs) யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Union Public Service Commission – UPSC) மூலம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எந்த பணிகளுக்கு ஆட்சேர்ப்பு?
- லைவ்ஸ்டாக் ஆபிசர் (Livestock Officer) – 8 இடங்கள்
- சீனியர் ஸ்டோர் ஆபிசர் (Senior Store Officer) – 7 இடங்கள்
- அசிஸ்டென்ட் கீப்பர் (Assistant Keeper) – 1 இடம்
என மொத்தம் 16 காலியிடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க பி.வி.எஸ்.சி & ஏ.எச் (B.V.Sc & A.H), எம்.எஸ்.சி (M.Sc), எம்.காம் (M.Com), எம்.ஏ (M.A) போன்ற தகுதிகள் தேவையாகும்.
வயது வரம்பு: இந்த ஆட்சேர்ப்பில் 01.05.2026 நிலவரப்படி, குறைந்தபட்ச வயது 18, அதிகபட்சம் 30 முதல் 35 வயது (பதவியின்படி மாறுபடும்).
இந்த ஆட்சேர்ப்பு எழுத்துத் தேர்வு (Written Exam), நேர்முகத் தேர்வு (Interview) மூலம் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் 25 ரூபாய், பெண்கள் / எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி, மே 1, 2026 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு மத்திய அரசு நிரந்தர வேலை, உயர்ந்த மதிப்பு கொண்ட UPSC தேர்வு, நல்ல சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் என மிகவும் முக்கியமான வாய்ப்பாகும்.
யு.பி.எஸ்.சி மூலம் வெளியாகியுள்ள இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026, உயர் கல்வி தகுதி கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
