காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி, சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது. நாள்பட்ட இருமல் பிரச்சினை உள்ளதால் அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக வந்துள்ளார். நுரையீரல் மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக அவர் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்கு வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சோனியா காந்திக்கு கடந்த டிசம்பர் மாதம் 79 வயது நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
