“இனி போட்டோவெல்லாம் ஓரமா போங்க…” – 2026-ல்சோஷியல் மீடியாவை ஆளப்போகும் 7 முக்கிய மாற்றங்கள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

சமூக வலைத்தளம் என்பது ஒரு கடல். அங்கே அலைகள் மாறிக்கொண்டே இருக்கும். 2025-ல் ஹிட்டடித்த ஃபார்முலா, 2026-ல் எடுபடாது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முதல் லிங்க்ட்-இன் வரை அடுத்த வருடம் என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன? டிஜிட்டல் உலகில் நம்மைத் தக்க வைத்துக்கொள்ளத் தெரிந்துகொள்ள வேண்டிய 7 ‘ஹாட்’ அப்டேட்ஸ் இதோ!

1. வீடியோதான் கிங்(Video is still King): “ரீல்ஸ் மோகம் இன்னும் குறையலையா?” என்று கேட்டால், “இனிமே தான் ஆரம்பமே” என்கிறது புள்ளிவிவரம். 2026-லும் வீடியோ கன்டென்ட் தான் ராஜாவாக இருக்கும். வெறும் புகைப்படங்களைப் பதிவிடுவதை விட, 30 நொடிகள் ஓடும் ஷார்ட்ஸ் (Shorts) அல்லது ரீல்ஸ்களுக்குத்தான் ரீச் அதிகம். ஆனால், ஆடுவது பாடுவது மட்டும் வீடியோ அல்ல; தகவல் தரும் வீடியோக்களுக்கே மவுசு அதிகம்.

ADVERTISEMENT

2. ஏஐ(AI) மயம்… ஆனால் உஷார்: செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் கன்டென்ட் சர்வ சாதாரணமாகி விடும். சாட்ஜிபிடி (ChatGPT) அல்லது மிட்ஜர்னி (Midjourney) உதவியுடன் போஸ்ட் போடுவது அதிகரிக்கும். ஆனால், “இது ரோபோட் எழுதினது” என்று தெரிந்தால் மக்கள் ஸ்க்ரோல் செய்து விடுவார்கள். ஏஐ-ஐ பயன்படுத்தினாலும், அதில் மனித உணர்வுகள் (Human Touch) இருக்க வேண்டும்.

3. தொடர் கன்டென்ட்(Serialized Content): டிவியில் மெகா சீரியலுக்கு ஏன் அவ்வளவு மவுசு? “அடுத்து என்ன நடக்கும்?” என்ற ஆர்வம் தான். அதே உத்தியைச் சோஷியல் மீடியாவிலும் பயன்படுத்தப் போகிறார்கள். ஒரே வீடியோவில் விஷயத்தைச் சொல்லாமல், “Part-1”, “Part-2” எனத் தொடர்களாக வெளியிடுவது ஆடியன்ஸை உங்கள் பக்கத்திலேயே கட்டிப்போடும்.

ADVERTISEMENT

4. வைரல் முக்கியமல்ல, சமூகம் தான் முக்கியம்: ஒரே இரவில் வைரல் ஆக வேண்டும் என்று நினைப்பதை விட, நமக்கான ஒரு சமூகத்தை (Community) உருவாக்குவதே பிராண்டுகளின் நோக்கமாக இருக்கும். 10 லட்சம் பேர் சும்மா வேடிக்கை பார்ப்பதை விட, 1000 பேர் உண்மையான ரசிகர்களாக இருப்பதே 2026-ன் பிசினஸ் மந்திரம்.

5. எங்கேஜ் மென்ட்(Engagement) தான் எல்லாம்: நீங்கள் போஸ்ட் போட்டதுமே எத்தனை லைக்ஸ் வருகிறது என்பதை விட, எத்தனை பேர் கமெண்ட் செய்கிறார்கள், அதற்கு நீங்கள் எப்படிப் பதில் அளிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஆடியன்ஸ் உடன் உரையாடுவது (Interaction) தான் உங்கள் அக்கவுண்ட்டை உயிர்ப்புடன் வைக்கும்.

ADVERTISEMENT

6. நம்பகத்தன்மை (Authenticity): பளபளப்பான ஃபில்டர்கள், ஓவர் மேக்கப் வீடியோக்களுக்கு இனி வேலை இல்லை. மக்கள் இயல்பான, உண்மையான முகங்களையும் கதைகளையும்தான் விரும்புகிறார்கள். “நான் இப்படித்தான்” என்று வெளிப்படையாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இன்ஃப்ளுயன்சர்களுக்கே வெற்றி கிடைக்கும்.

7. கூகுளுக்குப் போட்டியாக சோஷியல் சர்ச்(Social Search): இன்றைய ஜென்-ஜி (Gen-Z) தலைமுறையினர், ஒரு நல்ல ஹோட்டலைத் தேட கூகுளுக்குச் செல்வதில்லை; இன்ஸ்டாகிராமில் தான் தேடுகிறார்கள். எனவே, உங்கள் போஸ்ட்டில் சரியான கீவேர்டுகளை (Keywords) பயன்படுத்துவது அவசியம். சோஷியல் மீடியா இனி ஒரு சர்ச் என்ஜினாகவே செயல்படும்.

முடிவுரை: மாற்றத்தை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்களே ஜெயிக்கிறார்கள். இந்த 7 விஷயங்களைக் கவனத்தில் வைத்து உங்கள் சோஷியல் மீடியா பயணத்தைத் திட்டமிடுங்கள். 2026 உங்களுக்கே!

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share